இயக்குனர் ஹரியின் மூன்று மகன்களை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்

88

 

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவர் ஹரி. இவர் 2002ஆம் ஆண்டு தமிழ் எனும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

இதன்பின் சாமி, அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், சிங்கம், பூஜை என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். இதன்பின் தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகி நாளை (26.04.2024) வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் ரத்னம்.

இப்படத்தில் விஷால், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரி – பிரீத்தா மூன்று மகன்கள்
இயக்குனர் ஹரி, பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான பிரீத்தா விஜயகுமாரை 2002ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இயக்குனர் ஹரி, ப்ரீத்தா இருவரும் தங்களது மூன்று மகன்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

SHARE