இரண்டாவது போட்டியிலும் அணியை கைப்பற்றிய கேப்டன் ஷாய் ஹோப்!

118

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் அரைசதம் அடித்தார்.

சாம் கர்ரன் மிரட்டல் பந்துவீச்சு
ஆன்டிகுவாவில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தை துவங்கியது.

அலிக் அதனசி 4 ஓட்டங்களிலும், அடுத்து வந்த கார்டி ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பின்னர் பிரண்டன் கிங்கை 17 ஓட்டங்களில் சாம் கர்ரன் வெளியேற்றினார்.

அதனைத் தொடர்ந்து வந்த ஹெட்மையரையும் அவரே ஆட்டமிழக்க செய்தார்.

லிவிங்ஸ்டன் அபாரம்
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் என தடுமாறியது. அப்போது கேப்டன் ஷாய் ஹோப், ரூதர்போர்டு கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டது.

கடந்த போட்டியில் சதம் விளாசி அணியை வெற்றி பெற வைத்த ஹோப், இந்தப் போட்டியில் அரைசதம் அடித்து அணியை காப்பாற்றினார்.

ஒருபுறம் சாம் கர்ரன் விக்கெட்டுகளை கைப்பற்ற, லிவிங்ஸ்டன் தனது சூழலில் மேற்கிந்திய தீவுகள் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஹோப், ரூதர்போர்டு அரைசதம் விளாசல்
அவரது பந்துவீச்சில் அரைசதம் அடித்த ரூதர்போர்டு 63 (80) ஓட்டங்களில் அவுட் ஆனார். காரியா 5 ஓட்டங்களிலும், ஹோப் 68 (68) ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் மீண்டும் சரிந்த மேற்கிந்திய தீவுகள் அணி 39.4 ஓவர்களில் 202 ஓட்டங்களுக்கு சுருண்டது.

சாம் கர்ரன் மற்றும் லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட்டுகளும், ரெஹான் அகமது, அட்கின்சன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

SHARE