இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் பெண்களுக்கு தாதியர் பயிற்சி

559
இலங்கை இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் பெண்கள், தாதியர் பயிற்சி நெறிறை வெற்றிக்கரமாக முடித்துக்கொண்டதாக இராணுவத்தின் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சிப்பெற்ற 10 தமிழ் பெண்களுக்கு அண்மையில் கிளிநொச்சி இராணுவ படைத்தளத்தில் வைத்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

குறிப்பாக இந்த பயிற்சியின்போது தமிழ்பெண்களுக்கு முதலுதவிகள், சத்திரசிகிச்சையின் போது மேற்கொள்ளப்படும் உதவிகள், முகாமைத்துவம் உள்ளிட்ட பல விடயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன.

இதன்போது பயிற்சிகளில் சிறப்பாக செயற்பட்ட ஆர்.இன்சார்,  பி.சிபோரா மற்றும் பி.பிரிசில்லா ஆகியோருக்கு விருதுகளும் வழங்கப்பட்டதாக இராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

SHARE