இராணுவ அதிகாரி ஒருவர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளார்.

640

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் முன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளார்.

5104655506_755e269b50_z

ஐ.நா விசாரணைக்குழு நியூயோர்க், ஜெனிவா, பேங்கொக் ஆகிய நகரங்களில் சாட்சியங்களை பதிவு செய்ய தீர்மானித்துள்ளது.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்றுள்ள இராணுவ அதிகாரி ஒருவர் நியூயோர்க்கில் விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க உள்ளதுடன் அதற்கான சத்திய கடிதம் ஒன்றும் அவர் வழங்கியுள்ளார்.

அத்துடன் வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஆரம்பம் முதல் இறுதி வரை செய்திகளை சேகரித்து வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான ஊடகவியலாளர் ஒருவர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருக்கு எதிராக வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து ஜெனிவாவில் சாட்சியமளிக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது.

ஐ.நா விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் நபர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட மாட்டாது, சாட்சியமளித்தவர்கள் யார் என்பது 2034 ஆம் ஆண்டே இலங்கை அறிந்து கொள்ள முடியும்.

இதற்கு முன்னர், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு சாட்சியங்களை பதிவு செய்த போது 4 ஆயிரம் சாட்சிய ஆவணங்களும் 2 ஆயிரத்து 300 பேரும் சாட்சியமளித்திருந்தனர்.

5104059871_6ae1740ec2_z

தருமஸ்மன் குழு முன் சாட்சியமளித்தவர்கள் பற்றிய தகவல்களை 2031 ஆம் ஆண்டே இலங்கை அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE