இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: 3 வருடங்களுக்குப் பிறகு பாக். அணியில் உமர் அக்மல்

452
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 வருடங்களுக்கு பிறகு உமர் அக்மல் இடம் பெற்றுள்ளார். மொகமது ஹபீஸ் நீக்கப்பட்டுள்ளார்.

2013-ம் ஆண்டு ஹபீஸ் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடிய 5 டெஸ்ட் போட்டியில் 102 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி 16-ந்தேதியும், 2-ம் டெஸ்ட் 14-ந்தேதியும் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டி 23-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடக்கிறது.

டெஸ்ட் அணிக்கான வீரர்கள் விவரம்:-

அகமது ஷாசெத், குர்ராம் மன்சூர், ஷான் மசூத், அசார் அலி, யூனிஸ்கான், மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), அசாத் ஷாபிக், உமர் அக்மல், ஷர்பிராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), சயீத் அஜ்மல், அப்துர் ரஹ்மான், மொகமது தல்கா, ஜூனைத்கான், ரஹாத் அலி, வாஹாப் ரியாஸ்

ஒரு நாள் அணிக்கான வீரர்கள் விபரம்:-

அகமது ஷாசெத், ஷர்ஜீல் கான், மொகமது ஹபீஸ், மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), யூனிஸ்கான், உமர் அக்மல், பவாத் அலாம், சாஹிப் மஹ்சூத், சாகித் அப்ரிடி, அன்வர் அலி. சயீத் அஜ்மல், ஜூனைத் கான், மொகமது தல்ஹா, வாஹாப் ரியாஸ், ஷல்பிகர் பாபர்.

SHARE