இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: யூனிஸ்கான் சதத்தால் பாகிஸ்தான் 261/4

451
இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கலேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா உல் ஹக் பேட்டிங் தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் வீரர்கள் குர்ராம் மன்சூர்- அகமது ஷாஷெத் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மன்சூர் 3, ஷாஷெத் 4 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதன்பின் 3-வது விக்கெட்டுக்கு அசார் அலி- யூனிஸ்கான் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் நேர்த்தியாக விளையாடி ரன் சேர்த்தனர். பாகிஸ்தான் ஸ்கோர் 56 ஆக இருக்கும்போது அசார் அலி 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து யூனிஸ்கானுடன் மிஸ்பா உல் ஹக் ஜோடி சேர்ந்தார். மிஸ்பா 31 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு யூனிஸ்கானுடன் அசாத் சாபிக் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலையாக நின்று ரன் சேர்த்தனர். யூனிஸ்கான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அசாத் சாகிப் அரைசதம் சதம் அடித்தார். இருவரும் முதல்நாள் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டனர்.

முதல்நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 261 ரன் எடுத்துள்ளது. யூனிஸ்கான் 133 ரன்னுடனும், சாகிப் 55 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் பிரசாத், ஹெரத் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

SHARE