இலங்கையின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான அறிக்கை காலம் தாழ்த்தாமல் எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளிவரவேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என்று தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது. எனினும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை பிற்போடுமாறு இலங்கை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சையத் அல் ஹுசைன் அறிக்கை தாக்கல் செய்வதை 6 மாதங்களுக்கு பிற்போட்டுள்ளார். இந்த அறிக்கையில் காலம் தாழ்த்தாமல் உரியதினத்தில் அதாவது மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடவேண்டும் என்பதே எமது விரும்பமாகும். அறிக்கையை மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடுங்கள் வேண்டுமானால் அதன் உள்ளடக்கத்தை செம்ரெம்பர் மாதம் வெளியிடலாம். இதுவே எமது கோரிக்கையாகும். விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தாமதப்படுத்தி, கடைசியில் அது வெளிவராமல் போவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படக் கூடாது என்பதே எமது கருத்தாகும் –