டென்மார்க்கில் நடைபெற்ற அணையாத் தீபம் அன்னை பூபதியின் நினைவுநாளும் நாட்டுப்பற்றாளர் தினமும்

698

அணையாத் தீபம் அன்னை பூபதியின் இருபத்தியாறாம் ஆண்டு நினைவுநாளும்
நாட்டுப்பற்றாளர் தினமும் டென்மார்க்கில் வையின் நகரத்தில் நினைவுகூரப்பட்டது. பொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்கள் திரு. கணேசையா விமலேஸ்வரன் திரு.தம்பிஐயா மார்க்கண்டு திரு.செல்வராசா ஸ்ரெபஸ்ரியன் திரு.மதியழகன் கார்த்திகேசு அவர்களின் திருவுருவ படங்களிற்கு அவர்களின் குடும்பத்தினரால் ஈகச்சுடர்
ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களால் மலர் வணக்கம் சுடர் வணக்கம்
அகவணக்கம் செலுத்தப்பட்டது.மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களின் எழுச்சி கானங்களோடு நிகழ்வு
ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து கவிதைகள் எழுச்சி நடனங்கள் பேச்சுகள்
காட்சியும் கானமும் சிறப்புபேச்சு என்பன சிறப்பாக நடைபெற்றது.ஒரு விடுதலைப் போராட்டத்திலே பொதுமக்கள் எத்தனை உயர்ந்த தியாகத்தை புரிய
முடியும் என்பதற்கு அன்னை பூபதி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அவரின்
தியாகம் ஈடிணையற்றது. அது அன்னையர் குலத்துக்கு மட்டுமன்றி மொத்த தமிழ்
இனத்திற்குமே பெருமை சேர்க்கின்றது.இன் நிகழ்வானது நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும்
”தமிழர்களின் தாகம் தமழீழத் தாயகம்” என்ற தமிழர்களின் தாரக மந்திரத்துடன்
நிறைவுபெற்றது.

SHARE