இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள்?- இன்டர்போல் எச்சரிக்கை [

406

இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள் செயற்பட்டு வருவதாக உள்நாட்டு புலனாய்வுப் பிரிவினருக்கு சர்வதேச காவல்துறையான இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளில் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள தீவிரவாதிகள் இலங்கையை ஓர் களமாக பயன்படுத்திக் கொள்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து இவர்கள் சர்வதேச சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு தொடர்பிலான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹாண் குணரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

SHARE