இலங்கையின் கடந்த கால பாரிய குற்றங்களை கட்டுப்படுத்தவும் அந்தக்குற்றங்கள் தொடர்பில் நியாயங்களை பெற்றுக்கொள்வதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா யோசனையை முன்வைத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் எல்லீன் டொனாஹோ இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர், இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுக்கான நியாயங்களை தேடுதவற்காகவே சர்வதேச விசாரணை ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை தவிரவேறு நோக்கம் எதுவும் அமெரிக்காவுக்கு இல்லை என்ற முன்னாள் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இறுதிப்போரின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்களை மறந்துப்போக முடியாது. எனவேதான் 5 வருடங்களின் பின்னர் சர்வதேச விசாரணை ஒன்று கோரப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச விசாரணை நடத்தப்படாவிட்டால் இறுதியில் இலங்கையில் இறுதி சமாதானத்தை அடையமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீதான விசாரணை தொடர்பில் சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் கொண்டுள்ள உள்ளக பிரச்சினை என்ற நியாயம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
இந்தக்கொள்கையின் மூலம் இலங்கையில் ஏற்படவுள்ள இறுதி சமாதானத்தை ஊக்குவிக்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான அமரிக்காவின் முன்னாள் தூதுவர் எல்லீன் டொனாஹோ குறிப்பிட்டுள்ளார்.