இலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஐ.நாவின் சர்வதேச விசாரணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நாவின் பிரதி மனித உரிமை ஆணையாளர் ஃலேவியா பின்சேய்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

416

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சார்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை தொடர்பான விசாரணையின் வாய்மொழி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஐ.நாவின் சர்வதேச விசாரணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நாவின் பிரதி மனித உரிமை ஆணையாளர் ஃலேவியா பின்சேய்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பிலும் அவர் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.

பிரதி ஆணையாளரின் அறிக்கைக்கு பதிலளித்து உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க,

மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட்ட போதிலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களையும் விசாரணைக் குழுவையும் தொடர்ந்தும் நிராகரிப்பதாக கூறியுள்ளார்.

இக்கூட்டத் தொடரில் இலங்கையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் பொ.கஜேந்திரகுமார், பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ் நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் கணேஸ், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜெ. இம்மானுவேல், பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன்,

பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், ஊடக இணைப்பாளர் சுதா, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள், கனடிய சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி, இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழத் தமிழர் தொடர்பில் செயற்பட்டுவரும் தன்னார்வ நிறுவனமான அருள் தலைமையிலான பசுமைத் தாயகம் அணியினர் மற்றும் உலகின் பல பாகங்கங்களிலும் இருந்து வருகை தந்த மனித உரிமை ஆர்வலர்கள் என பலதரப் பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் விசேட அம்சம் 27வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருந்த பல அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து முரண்பாடின்றி இம்முறை கூட்டத் தொடரை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

13வது திருத்தம் தொடர்பில் இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம்: ஐ.நாவில் இந்தியா

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தினை அமுல்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றிய இந்தியாவின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச்சட்ட முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது. இதில் மாற்றம் இல்லை.

இதேநேரம் இலங்கைத் தமிழர்கள் கௌரவமாக வாழக்கூடிய நிரந்த அரசியல் தீர்வு ஒன்றும் வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாப்பரசரை பாவித்து ராஜபக்ச அரசியல் லாபம் அடையலாம்: அருட் தந்தை இமானுவேல்

ஐக்கிய நாடுகள் சபையின் 27 வது கூட்டத் தொடர் நியூயோர்க்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் கலந்து கொண்ட  உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் இமானுவேல் அடிகளார் லங்காசிறி வானொலியின் பிரத்தியேக பேட்டியில் பங்கேற்றார்.

கிறிஸ்தவர்கள் இனங்களுக்கிடையில் உள்ள நல்லிணக்கத்தினை உருவாக்குவதற்கு முயற்சிப்பவர்கள் இதன் காரணமாக இலங்கை திருச்சபை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஐ நா வில் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கவில்லை என  அருட் தந்தை இமானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஐ. நா இலங்கை தொடர்பில் தாக்கல் செய்த அறிக்கை முன்னேற்றகரமானது:  பா. ம.க. சட்ட உறுப்பினர் கணேஸ்

ஐக்கிய நாடுகள் சபையின் 27 வது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் கனேஸ் லங்காசிறி வானொலியின் பிரத்தியேக பேட்டியில் பங்கேற்றார்.

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பில் பன்னாட்டு விசாரணை அவசியம் என தாக்கல் செய்த அறிக்கை ஒரு முன்னேற்றகரமான விடயமாக இருக்கின்றது என பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கணேஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

SHARE