இலங்கையுடன் நெருக்கிய உறவை பேண விரும்பும் ரஷ்யா!

303

இலங்கையுடன் உறவுகளை விருத்தி செய்துக்கொள்ள ரஷ்யா ஆர்வம் கொண்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு உறவை புதுப்பித்துக் கொள்வதில் அண்மைக்காலமாக ரஷ்யா தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் மீன்பிடி மற்றும் விவசாயத்துறையிலும் ரஷ்யா ஒத்துழைப்பை வழங்க விரும்புவதாக புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் சமன் வீரசிங்கவின் நியமனக்கடிதத்தை பெற்றுக்கொள்ளும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து தூதுவர் சமன் வீரசிங்க, ரஷ்ய ஜனாதிபதிக்கு விளக்கம் அளித்தார்.

SHARE