இலங்கையை இழிவுபடுத்தும் நோக்கில் ஐ.நா விசாரணை நடத்துகின்றது – ஜீ.எல்.பீரிஸ்

429

maxresdefault

போலியான முறையில் சர்வதேச விசாரணைகளுக்கான சாட்சியங்கள் திரட்டப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கையின் யுத்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாணந்துறை மற்றும் மொரட்டுவ ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற சந்திப்புக்களில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்கள் மட்டும் கொழும்பிற்கு அழைத்து இரகசியமான முறையில் அண்மையில் சாட்சியங்கள் திரட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சாட்சியங்கள் திரட்டும் முறைமை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்,

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக பாரியளவில் பணம் திரட்டப்பட்டு நாட்டுக்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையை இழிவுபடுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் விசாரணை நடத்துகின்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டுக்கான சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உரிய நோக்கமின்றியே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்தி வருவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சில நாடுகள் தொடர்ச்சியாக இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறெனினும், சர்வதேசத்திலிருந்து இலங்கை தனிமைப்பட விரும்பயதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE