எந்த வகையிலான பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை என இராணுவம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்யவில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பிலான விவகாரங்களில் அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பும் எந்த விதமாகன நெகிழ்வுப் போக்கையும் பின்பற்றப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட சில அமைப்புக்கள் மீளவும் இலங்கையில் யுத்தத்தை முன்னெடுக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மீள ஒருங்கிணையவே மாட்டார்கள் என உறுதியாக தற்போதைக்கு குறிப்பிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பான பட்டியல் மிகவும் நியாயமான முறையில் தகுந்த ஆதாரங்களுடன் தயாரிக்கப்பட்டவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.