இலைமறை காய்யாக வவுனியாவில் ஒரு இசைக் கழைஞன் – ஸ்கெனோவா பெனாண்டோ

675

 

சிறு வயதிலேயே தனது தனித்திறமைகளை வெளிப்படுத்தி வரும் வவுனியாவைச் சேர்ந்த ஸ்கெனோவா பெனாண்டோ (ளுஉயழெறய குநசயெனெழ) வயது 21 என்ற இந்த இளைஞன் இதுவரை 12 பாடல்களையும் 2 குறும் படங்களையும் இயக்கி சிறு வயதிலேயே பாடகர் மற்றும் இயக்குனர் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

வன்னி மாவட்டத்தில் இந்நாட்டு கழைஞர்களை ஊக்குவிக்காததன் காரணமாக இவ்வாறு இலைமறை காய்யாக வாழ்ந்து வருகின்ற கழைஞர்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

இந்தியாவை பொறுத்த வரையிலும் இலங்கையின் சகோதர கழைஞர்களை (ளுinhயடநளந) பொருத்தவரையிலும் அவர்களுடைய கலை, வளர்ச்சி அடைவதற்கு அந்நாட்டு அரசாங்கங்களும் சிக்கன கடனுதவியாளர்களும், வங்கிகள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் என்று பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இது இவ்வாறு இருக்க நம்நாட்டு கழைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்தை பெற்றுக்கொள்ள முடியும். ‘தினப்புயலின் களம்’ இவ்வாறான கழைஞர்களை கண்டறிந்து அவர்களின் முன்னேற்றத்திற்கான முன்னெடுப்புக்களுக்கு ஊடக வாயிலாக ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நாட்டு கழைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம் இந்த வடபகுதி மண் பெருமை சேர்க்கும் என்பதில் எந்த வித அச்சமும் இல்லை.

இப்பொழுது இக்கழைஞனின் கலைத் திறமைகளை இந்த வீடியோவில் காணலாம்.

SHARE