இளம் ஹீரோயின்களுக்குதான் ஸ்கிரிப்ட் அமைக்கிறார்கள்: பிரியங்கா குற்றச்சாட்டு 

348
இளம் நடிகைகளுக்கு மட்டுமே இயக்குனர்கள் கதை அமைக்கிறார்கள் என்றார் பிரியங்கா திரிவேதி.காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பிரியங்கா திரிவேதி. இவர் கன்னட நடிகர் உபேந்திராவை மணந்தார். பிறகு இல்லறத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். வருடத்துக்கு ஒரு படம் என்ற முறையில் அவ்வப்போது நடிக்கிறார்.

அவர் கூறியதாவது:எங்களது நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ஒன்றிரண்டு மாதத்தில் நிறைவடையும். தற்போது திரில்லர் படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். கண்மூடித்தனமான திரில்லர் என்றில்லாமல் வாழ்க்கையில் நடக்கும் எதிர்மறையான சம்பவங்களை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மென்மையான காதல் கதையும் உள்ளது. இதுபோன்ற ஸ்கிரிப்ட் அடிக்கடி கிடைக்காது.

ஹீரோயினை மையமாக வைத்து வரும் ஸ்கிரிப்ட் என்பது ரிதான விஷயம். அப்படியே உருவானாலும் அது இளம் ஹீரோயின்களை மையமாக வைத்துதான் உருவாகும். நடுத்தர வயதுள்ள என்னைப்போன்ற ஹீரோயின்களுக்கு ஸ்கிரிப்ட் என்பது அமையாத விஷயம். அது கிடைத்திருக்கிறது. அதை தவறவிட விரும்பவில்லை. வரும் செப்டம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்க உள்ளது என்றார்

 

SHARE