இஸ்ரேல் – காசா போரின் எதிரொலி; வெறுப்புணர்வு சம்பவங்கள் அதிகரிப்பு

52

 

ரொறன்ரோவில் இஸ்ரேல் காசா போர் காரணமாக வெறுப்புணர்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

ரொறன்ரோ பொலிஸ் பிரதானி மெய்ரோன் டெம்கிவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் யூத எதிர்ப்பு சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வெறுப்புணர்வு சம்பவங்களின் எண்ணிக்கை 1600 வீதமாக உயர்வடைந்துள்ளது.குறிப்பாக கடந்த ஒக்ரோபர் மாதம் 7ம் திகதியின் பின்னர் இவ்வாறு வெறுப்புணர்வு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அச்சுறுத்தல் விடுத்தல், தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த வெறுப்புணர்வு சம்பவங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE