ஈழத் தமிழர்களை முட்டாள்தனமாக வழிநடத்திய தமிழர் தலைமைகளின் முட்டாள்தனமான நடவடிக்கையால் தமிழர்களைக் கைவிட்டது சர்வதேசம் !

351

 

 

ஈழத் தமிழர்களை முட்டாள்தனமாக வழிநடத்திய தமிழர் தலைமைகளின் முட்டாள்தனமான நடவடிக்கையால் தமிழர்களைக் கைவிட்டது சர்வதேசம் !

maxresdefault

சர்வதேச யுத்தக் குற்ற அறிக்கையை தாமதித்து வெளியிடுவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசேன் சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த கடிதத்தில் புதிதாக சிறிலங்காவில் ஆட்சி அமைத்துள்ள அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளின் அடிப்படையில் இந்த விசாரணை அறிக்கையை தாமதாக வெளியிட தீர்மானித்திருப்பதாக கூறியுள்ளார்

யுத்தக்குற்ற வாளிகளை தண்டிப்பதாகவும் சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்து கடிதம் ஒன்றை வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த அறிக்கையை தாமதிப்பதன் மூலம், விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க இன்னும் கால அவகாசம் கிடைக்கும்.

எனவே இந்த விசாரணைகளுக்கு புதிய தகவல்களும் கிடைக்க வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

“ஆறியகஞ்சி பழங்கஞ்சி ”
சர்வதேசத்தை சமாளிப்பது ரணிலுக்கு பஞ்சு மிட்டாய் சாப்பிடுவதுபோல இலகுவான விஷயம் என்று தேர்தலுக்கு முன்பிருந்தே தலையால் அடித்துக்கொடேன்.
இந்தக்காலக்கெடு ஸ்ரீலங்காவுக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
அவர்கள் இன்மேல் நிதானமாகக் காய் நகர்த்துவார்கள்.
இது சிங்களத்தின் மிகப்பெரிய இராஜ தந்திர வெற்றி!

குற்றமிழைத்தவர்களைக்கண்டுபிடித்து தூக்கில் போடுவது அல்ல தமிழர்களின் தேவை. .
குற்றம் இழைக்கப்பட்டிருப்பதை நிரூபித்து , எதிகாலத்தில் இவ்வாறான குற்றங்கள் நிகழாமல் இருப்பதை உருதிபடுத்துவதன் பொருட்டு , தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வலியுறுத்துவதே தமிழர்களின் அபிலாஷை .
ஆனால் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதுதான் 65 வருடகால போராட்டத்தின் , தியாகங்களின் இலக்கு , இலட்சியம் என்பதுபோல தமிழர்கள் திசைதிருப்பப் படுகிறார்கள்.

தமிழர்களுக்கு இப்போது இருக்கும் பிரச்சினை குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பது மட்டும்தானா?

ஐ.நா அறிக்கை ஒத்திவைப்பு தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்கிறார் இரா.சம்பந்தன்.

விசாரணை அறிக்கை தாமதமானால் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்ப இடமளிக்கும் என்கிறது மன்னிப்புச் சபை.

மகிழ்ச்சிக்கடலில் மிதக்கிறது இந்தியா ! இலங்கையர்களுக்கு ஒன் அரைவல் வீசா வழங்கத் தீர்மாணித்துள்ளது !

மகிழ்ச்சி ஆரவாரத்தில் சிங்களவர்கள் ! தலைகுனிந்தார்கள் தமிழர்கள் !

SHARE