உங்களை பிரிவது பேரிழப்பு: மன்மோகனிடம் ஒபாமா டெலிபோனில் உருக்கம்

511
ஜனாதிபதியிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்த மன்மோகன் சிங்குடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தொலைபேசி மூலமாக உரையாற்றினார்.

தனது மதிப்பிற்குரிய உலகத் தலைவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர் என்று குறிப்பிட்ட ஒபாமா, ‘அன்றன்றாடம் தங்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை இழந்து உங்களை பிரிவது பேரிழப்பு. உங்களது தலைமையின்கீழ் இந்திய – அமெரிக்க நல்லுறவுக்கு நன்மை புரிந்தது என்று குறிப்பிட்ட ஒபாமா, தாங்கள் ஓய்வெடுத்துக் கொள்வீர்கள், விரைவில் உங்களை சந்திபேன் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.

SHARE