கடந்த நவம்பர் 12 ஆம் திகதி இந்தியாவின் உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 பணியாளர்கள் சுமார் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு இப்பொது ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் நலமோடு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை சரிவு கடந்த 12 நவம்பர் 2023 அன்று ஏற்பட்டது, இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷி மாவட்டத்தில் கட்டுமானத்தில் இருந்த சில்க்யாரா வளைவு – பர்கோட் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது அதன் உள்ளே பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கினார்.
ஆனால் சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த அவசரகால நடவடிக்கைள் பொது பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் அந்த 41 பணியாளர்களும் பத்திரமாக தங்களை நிலைப்படுத்திக்கொண்டனர். கடந்த 17 நாட்களாக பல்வேறு துறையை சேர்ந்த நிபுணர்கள் மற்றும், இயந்திரங்கள் போராடிய நிலையில் இன்று நவம்பர் 28ம் திகதி அவர்கள் ஒருவர் பின் ஒருவராக பாத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
தயார் நிலையில் உள்ள 41 அம்புலன்சுகளில் அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளனர். தயார் நிலையில் சில ஹெலிகொப்டர்களும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.