உயிர் பிரியும் தருவாயில் தந்தை.. தொகுப்பாளினி டிடி செய்து கொடுத்த சத்தியம்

208

 

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவரை டிடி என செல்லமாக அனைவரும் அழைப்பார்கள்.

பள்ளி பருவத்தில் இருந்தே சின்னத்திரையில் பணியாற்றி வரும் டிடியின் வாழ்க்கையில் மிகப்பெரிய உறுதுணையாக இருந்த நபர் என்றால் அது அவருடைய தந்தை தானாம்.

டிடியின் குழந்தை பருவத்தில் அவருடைய தந்தை ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதற்காக பள்ளிக்கு வரும்போது டிடி-யை அழைத்துக்கொண்டு போய், அவருடைய ஸ்கூல் ஃபீஸ் செல்லானை நிரப்ப வைத்து, டிடி கையிலேயே பணத்தை கொடுத்து தான் ஃபீஸ் கட்ட வைப்பாராம்.

இந்த பழக்கம் பள்ளி பருவத்தில் இருந்து, கல்லூரி வரை நீண்டு கொண்டே இருந்திருக்கிறது. எந்த வேலையாக இருந்தாலும், நீயே கற்றுக்கொண்டு அதை செய்ய வேண்டும் என்ற பழக்கத்தை டிடிக்கு சொல்லி கொடுத்துள்ளார்.

சத்தியம் செய்து கொடுத்த டிடி
இந்த நிலையில், திடீரென டிடி-யின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. அந்த சமயத்தில் தனது தந்தையிடம் ‘நீங்கள் கவலைப்படாதீங்க அப்பா நான் நம்முடைய குடும்பத்தை பார்த்துக்கொள்கிறேன்’ என சத்தியம் செய்து கொடுத்தாராம்.

டிடி சத்தியம் செய்து கொடுத்த சில மணி நேரங்களிலேயே அவருடைய தந்தை மரணமடைந்துள்ளார். அதன்பின், டிடியும் அவருடைய அக்கா நடிகை பிரியதர்ஷினியின் இணைந்து தான் தங்களுடைய குடும்பத்தை பார்த்துக்கொண்டார்களாம். .

தொகுப்பாளினி டிடி தனது தந்தை குறித்து புகைப்படம் மற்றும் கடிதம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE