உலகையே பிரமிக்க வைத்த ராட்சத விமானம்

563

‘ஹைப்ரிட் ஏர்’ நிறுவனம் கடந்த பிப்ரவரி 28ம் தேதி பிரிட்டனில் பறக்க வைத்துக் காட்டிய ஒரு விமானம், உலகையே பிரமிக்க வைத்திருக்கிறது. ‘ஹெச்ஏவி 304’ என்ற இந்த விமானம், உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமையைப் பெறுகிறது. ஒரு விமானம், ஒரு ஹெலிகாப்டர், ஒரு ஏர்ஷிப் ஆகிய மூன்றையும் இணைத்த கலவை போல இது இருக்கிறது.
* உலகின் நீளமான விமானம் இதுதான். இதன் நீளம் 302 அடி. இப்போதைய நீளமான பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 (239.5 அடி), சரக்கு விமானமான அனடோனோவ் ஏஎன்225 (276 அடி) ஆகியவற்றைவிட நீளமானது. இதன் உயரம் 85 அடி. அகலம் 143 அடி
* இது வானத்தில் எழுவதற்கு நீளமான ரன்வே தேவையில்லை. ஒரு ஹெலிகாப்டரைப் போல அப்படியே மேலெழும்பும் திறன் படைத்தது.
* மற்ற விமானங்களைப் போல இது அதிக எரிபொருளைத் தீர்க்காது. ஹீலியம் நிரப்பப்பட்ட ஒரு பலூன் போல இது மிதப்பதால், தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் வரை வானத்தில் மிதந்து கொண்டிருக்கும். இயற்கைச் சீற்றங்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும், மக்களை மீட்கவும், போர்க்கால கண்காணிப்புக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
* இருபது டன் சரக்குகளை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லும் திறனுள்ளது என்பதால், பெரிய தளவாடங்களை அவசரமாக கண்டம் விட்டு கண்டம் எடுத்துச் செல்லவும் இதைப் பயன்படுத்தலாம்.
* இவ்வளவு பெரிதாக இருந்தாலும், இது உயரத்திலும் பறக்கும்; வேகமாகவும் செல்லும். தரை மட்டத்திலிருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில், மணிக்கு 148 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது இது.
* இதன் அடுத்த கட்டமாக ‘ஏர்லேண்டர் 50’ என்ற விமானத்தை உருவாக்கும் முயற்சியும் நடக்கிறது. இது 50 டன் சரக்குகளை கையாளும் திறன் படைத்ததாம்.
SHARE