உலக ஆயுதக் கொள்வனவில் இலங்கைக்கு 14வது இடம்

631

இலங்கையில் யுத்தம் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து இன்று வரைக்கும் தமிழ்மக்களுக்கெதிராகவே அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது. அதனொரு கட்டமாக 1990ம் ஆண்டுகாலப்பகுதிக்குப் பின்னர் தமிழ்மக்களையும், விடுதலைப்புலிகளையும் அழித் தொழிக்கும் நோக்கத்தோடு ஆரம்பகாலத்திலிருந்து பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து ஆயுதக்கொள்வனவுகளை இலங் கையரசு மேற்கொண்டுவந்தது.அத்தனைக்கும் ஈடுகொடுக்கும் வகையில் தமிழீழத்திற்கான போராட்டத்தை பிரபா கரன் முன்னெடுத்து வந்தார்.

1995ம் ஆண்டு காலப்பகுதியில் சந்திரிக்கா அரசுடனான யுத்தம் உக்கிரமடைந்தது. அக்காலகட்டத்திலும் மேற்குறிப்பிடப்பட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கியிருந்தன. இலங்கையரசு ஒவ்வொரு தடவையும் பிற நாடுகளில் ஆயுதக்கொள்வனவுகளை பெற்றுக்கொள்ளும் போதெல்லாம் அந்த ஆயுதங்களை எப்படியாவது இராணுவத்தினருடனான தாக்கு தல்களின் போது விடுதலைப்புலிகள் கைபற்றிவிடுவார்கள். அதனையே மீள வும் இராணுவத்தினருக்கு எதிராக பயன்படுத்துவது விடுதலைப்புலிகளின் தந்திரோபாய வியூகமாக இருந்தது.

ஒருகட்டத்தில் சந்திரிக்க அரசு பாரிய அழிவுகளை சந்தித்துக்கொண்டிருந்த பொழுது, பாகிஸ்தான் அரசிடம் அதிநவீன ஆயுதங்களை பெற்றுக்கொண்டதுடன், தமிழ் மக்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தது. இந்தியாவுடனான நட்புறவுகளை இலங்கையரசு வைத்திருந்தமையின் காரணத்தினால் பாகிஸ்தான் அரசாங்கம் தன்னுடைய உதவிகளை சற்றுத்தளர்த்தி வந்தது. அந்த இடைவெளிக்குள் சீனாவும், இந்தியாவும் உட்புகுந்துகொண்டன. இதன் காரணமாக இந்திய அரசாங்கம் பொருளாதார ரீதியிலும், ஆயுத ரீதியிலும் இலங்கையரசாங்கத்திற்கு தனது உதவி களை வழங்கிக்கொண்டிருந்தது. அதே போல விடுதலைப்புலிகளுக்கும் தமிழ்நாடு ஆயுதங்களை வழங்கியருந்தது ஆனால் இந்திய மத்திய அரசு வழங்கவில்லை.

இவ்வாறு யுத்தமும், பேச்சுவார்த்தைகளுமாக நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை, விடுதலைப் புலிகளும் பெருமளவி லான ஆயுதக்கொள்வனவுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டதன் காரணமாக விடுதலைப்புலிகளுடனான நட்புறவில் விரிசல் நிலை ஏற்பட்டது. இக்காலகட்டத்தின் பொழுது இலங்கை அரசை வைத்து பிரபாகரனை கொலை செய்யவேண்டும் என்ற திட்டத்தை இந்திய மத்தியரசு மேற்கொண்டபோதிலும் அது முடியாமற்போனது.
ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு பிரபாகரன் பயன்படுத்திய குறியீடு கஞ்சுகுடிச்சாறு என்பதாகும். இவ்விடயம் தொடர்பாக ஏற்கனவே எமது தினப்புயல் பத்திரிகையில் செய்திகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இலங்கையரசு விடுதலைப்புலிகளையும், இந்தியா வையும் நிரந்தர பகைமையாக்கியது. இதன் காரணமாக அடுத்தகட்ட போராட்டங்களை தமிழீழவிடுதலைப்புலிகளுக்கெதிராக முன்னெடுத்துச் செல்வதில் இலங்கையரசு தீவிரம் காட்டியது. பல பல நாடுகளிலிருந்து ஆயுதக்கொள் வனவுகளை இலங்கையரசு செய்தபோதிலும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்கமுடியாமற்போனது. காரணம் பிரபாகரனின் தாக்குதல் வியூகங்களே எனலாம். இதன் காரணமாக சந்திரிக்க அரசு விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு சம்மதம் தெரிவிக்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.
நோர்வே அரசின் உதவி யோடு சர்வதேச ரீதியிலான உள்ளுர் பேச்சுவார்த்தைகள் ஒன்பதும், சர்வதேசப் பேச்சுக்கள் ஏழும் இடம்பெற இவையணைத்துமே தோல்வியில் முடிவடைந்தன. இக்காலகட்டத்தின்பொழுது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரன் ஆயுதக்கொள்வனவில் குறியாகவிருந்தார். இலங்கையரசு இக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் பிரதேசங்களில் தமது புலனாய்வுகளை தீவிரப்படுத்தியிருந்தது.

இடைக்கால நிர்வாகத்திற்கும் விடுலைப்புலிகளுக்கும்; இடையில் சமாதான ஒப்பந்தம் காணப்பட்டது. 2001-2002 காலப்பகுதியில் பிரபாகரனுக்கும் கருணாவிற்கும் இடையில் விரிசல் ஏற்படத்தொடங்கியது. இவ்விரிசலை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அரசு கருணா, பிரபாகரனை விட்டுப்பிரிந்ததன் காரணமாக விடுதலைப்புலிகளை இலகுவில் வெற்றிகாணமுடியும் என்ற முடிவுக்கும் வந்தது.
இதனூடாகவும் கரு ணாவும், பிரபாகரனும் பிரிக்கப்பட்டனர். இவ்வாறான சூழ்நிலை காணப்பட்டபொழுது, விடுதலைப்புலிகளின் தரப்பு இரண்டாக பிளவுபட்டது. மீண்டும் புலிகளுட னான யுத்தம் மாவிலாறில் ஆரம்பித்;;;;;;;;தது. விடுதலைப்புலிகளை எவ்வாறு தாக்குவதன் மூலம் வெற்றி பெற லாம், விடுதலைப்புலிகளின் இரகசியம் பற்றிய தந்திரோபாய விடயங்களை கருணா அம்மான் இலங்கையரசிற்கு கூறியிருந்தார்.

இதனால் தமிழினமும், தமிழர் போராட்டமும் காட்டிக்கொடுக்கப்பட்டது. எதிலும் சளைக்காதவர்கள் அல்ல என்றவகையில் தன்னால் முடிந்தளவில் இறுதிவரை போராடினார். இறுதிக்கட்ட யுத்தத்தின் பொழுது இலங்கையரசினால் இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து ஆயுதக்கப்பல்கள் கொள்வனது செய்யப்பட்டது. இக்காலகட்டத்தின் பொழுது சீனாவிடமிருந்து இரசா யண ஆயுதங்கள் இலங்கையரசினால் கொள்வனவு செய்யப்பட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கூட தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்;தார். இதன் காரணமாக இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள் விமர்சனத்திற்குள்ளாகியதுடன் கொலை மிரட்டல்களும் விடப்பட்டிருந்தது. அவற்றை தாம் செய்யவில்லை என இலங்கையரசு கூறிவருகிறது. இவை ஒருபுறமிருக்க, ட்றான்ஸ் பரன்சி என்ற சர்வதேச அமைப்பு விடுத்துள்ள அறிக்கையொன்றில், சுமார் 82 நாடுகள் ஆயுதக்கொள்வனவில் ஈடுபட்டதாகவும், 200 நாடுகளில் ஆயுதக்கொள்வனவுகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவரிசையில் அல்ஜீரியா, அங்கோலா, கெமரூன், ஐவரீகோஸ்ட், எகிப்து, ஈரான், எரித்தெரியா, லிபியா, கட்டார், சிரியா, ஓமான் போன்ற நாடுகள் ஆயுதக்கொள்வனவில் முன்னணி வகிக்கின்றது. அதற்கு அடுத்தபடியாக இலங்கை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இத்தனை நாடுகளுக்கு மத்தியிலும் அதிகமான யுத்தம் சிரியா, லிபியா போன்ற நாடுகளிலும் இடம்பெற்றது. ஒரு இனத்தை கொன்றொழிக்கும் முகமாக இலங்கையரசினால் திட்டமிடப்பட்டு வகுக்கப்பட்டதுதான் தமிழ் மக்களுக்கெதிரான யுத்தம். அத னுடைய சாட்சியங்கள் இன்னமும் தொடர்கதையாய் தொடர்ந்தவண்ணமே உள்ளது. ஆயுதக்கொள்வனவுத் தரப்பட்டியலில் இலங்கையரசு 14வது இடத்தில் இருப்பதை இலங்கையில் யுத்தம் எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பதற்கான சான்றுகளாகவும் பதிவாகியுள்ளது.

கொத்துக்குண்டுகளை பயன் படுத்தவில்லை என்று கூறும் அதே நேரம் கொத்துக்குண்டுகளுக்கு பலியானவர்களுடைய உடல்களை காணக்கூடியதாகவும் இருந்தது. இதுதொடர்பான பகுப்பாய்வுகளும் செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் இலங்கையரசு சர்வதேச சமூகத்திற்கு என்னவிடயத்தினைக் கூறப்போகின்றது என்பது ஒருபக்கம் இருக்க, சரத்பொன்சேகா இறுதியுத்தத்தின் போது அரசிற்குத் தெரியாமல் ஆயுதக்கொள்வனவுகளில் ஈடுபட்டார் என்று அப்பொழுது கூறப்பட்டதன் காரணமாகவே பல்வேறு குற்றங்கள் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்பொழுது அமெரிக்காவின் நெருக்குதல்கள் காரண மாகவே, சரத்பொன்சேகா விடுதலைசெய்யப்பட்டுவிட்டார். இவரைக் பொறுத்தவரையிலும் ஈழத்தமிழருடைய அரசியலுக்காக அல்லது அவருடைய அரசியலுக்காக தமிழ் மக்களை சார்ந்து பேசிவருகின்றார். ஒரு காலத்தில் பிரபா கரனின் போராட்டத்தை கொச்சைப் படுத்திக் கூறிய சரத்பொன்சேகா கடந்த மேல்மாகாணசபைத் தேர்தலின் போது பிரபாகரனை கொச்சைப்படுத்தி உரையாற்றினார். சீன, பாகிஸ்தானிடமிருந்து இவர் அதி நவீன ஆயுதங்களை கொள்வனவு செய்து தமிழ்மக்களுக்கெதிராக பயன்படுத்தியுள்ளார்.

எந்தவொரு நாட்டிலும் இல்லாதளவிற்கு ஈழப்போரின் இறுதிகட்டத்தில் அப்பாவிப் பொதுமக்களினுடைய உடல்களை பார்க்கின்றபொழுது, எவ்வாறான ஆயுதங்களை பயன்படுத்தி கொலை செய்யப்பட்டார்கள் என்ற விடயம் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. இது இவ் வாறிருக்க, மற்றுமொரு ஆயுதப்போராட்டத்தை இலங்கையில் உருவாக்கும் நோக்கில் சர்வதேசங்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதே நேரம் இலங்கையரசில் உள்ள சில இனவாதக்கட்சிகளும் மீண்டும் ஒரு இனச் சுத்திகரிப்பிற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றது. தமிழினத் திற்கு எதிராக மற்றுமொரு யுத்தம் ஆரம்பிக்குமாகவிருந்தால் மீண்டுமொரு ஆயுதக்கொள்வனவில் ஈடுபடும் நிலைக்குத்தள்ளப்படும். இதனால் இலங்கையரசு ஆயுதக்கொள்வனவில் முதல்நிலையை எட்டிக்கொள்ளலாம். காரணம் தற்பொழுது நடைபெற்றதான யுத்தம் அல்ல . அதனை விட பன்மடங்கு நடைபெறும் என்பதுதான் உண்மை.

–  நெற்றிப்பொறியன் –

SHARE