உலக கோப்பை கால்பந்து: 1-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது இத்தாலி

491
உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஆப் டெத் ‘டி’ பிரிவாகும். அந்த பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் இத்தாலி, இங்கிலாந்து உருகுவே மற்றும் கோஸ்டாரிகா அணிகள் இடம் பெற்றுள்ளன.

இவ்விரு அணிகளும் 24 முறை மோதியுள்ளன. இதில் இத்தாலி 9 ஆட்டத்திலும், இங்கிலாந்து 8 ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தன. 7 ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது. தரவரிசை பட்டியலில் இத்தாலி 9–வது இடத்திலும், இங்கிலாந்து 10–வது இடத்திலும் உள்ளன.

இந்திய நேரப்படி, இன்று அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இத்தாலி– இங்கிலாந்து அணிகள் மோதின. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் விறுவிறுப்பான ஆட்டம் என்பதால் பார்வையாளர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆட்டத்தின் தொடக்கத்தில், இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் கோலை இத்தாலி பதிவு செய்தது. அடுத்த சில நிமிடங்களுக்குள், இங்கிலாந்தும் இத்தாலிக்கு பதிலடி தந்து, 1-1 என்ற கணக்கில் கோல் பட்டியலை சமன் செய்தது.

இடைவேளை வரை இந்த நிலையே நீடிக்கையில், பிற்பகுதியில் ஆக்ரோஷமாக மோதிய இரு அணிகளும் அடுத்த பந்தை வலைக்குள் செலுத்த எடுத்த முயற்சிகள் அனைத்தும், எதிரணியால் தடுத்தாளப்பட்டன. இலக்கிட்ட 90 நிமிட நேரத்துக்கும் மேலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டும், ஆட்டத்தின் பின்பாதியில் எந்த அனியும் கோல் அடிக்காததால் 1-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை இத்தாலி வென்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்துடன் 25 ஆட்டங்களில் மோதி, அவற்றில் 10 ஆட்டங்களில் வென்ற பெருமையை இத்தாலி அடைந்துள்ளது. வரும் வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் உருகுவே அணியை இங்கிலாந்து எதிர்கொள்கிறது.

SHARE