உலக கோப்பை கால்பந்து: 3-2 கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி

443
பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று இரவு நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில், நெதர்லாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. ஏற்கனவே ஸ்பெயினை வீழ்த்திய உற்சாகத்தில் இருந்த நெதர்லாந்து, ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.

போட்டியின் 20வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ராபென் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். இதற்கு அடுத்த நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் டிம் காகில் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுக்க, முதல் பாதி ஆட்டத்தில் 1–1 என சமநிலை வகித்தது.

இரண்டாவது பாதியில், 54 வது நிமிடத்தில் கோல் ஏரியாவில் வைத்து நெதர்லாந்தின் ஜன்மாத் இடது கையில் பந்து பட்டது. இதனால், கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில், ஜெடினக் ஒரு கோல் அடிக்க, 2–1 என, ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது.

இதன் பின் எழுச்சி பெற்ற நெதர்லாந்து அணிக்கு 58, 68வது நிமிடங்களில் ராபின் வான் பெர்சி, மெம்பிஸ் டெம்பே தலா ஒரு கோல் அடித்து அசத்த, 3–2 என, நெதர்லாந்து முந்தியது.

முடிவில், நெதர்லாந்து அணி 3–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

SHARE