“உளவியல் சித்திரவதைக்குள்ளாகியுள்ள சிறுபான்மையின மக்கள்”; வைத்திய கலாநிதி சி.சிவமோகன் 

522
யூன் 26 சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாளாகும். இந் நாளை பற்றி வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த கால யுத்தம் எமது நாட்டு மக்களை பல இன்னல்களுக்கு தள்ளியுள்ளது. சித்திரவதைகளுக்கு உள்ளானோர் இன்று இன மத பேதம் இன்றி மனோவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு தமக்குள்ளேயே உளக்குமுறல்களை அடக்கிக்கொண்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழினம் இன்று இலங்கையில் சந்தித்த சித்திரவதைகள் எண்ணிலடங்கா.
பூரண அரசியல், பொருளாதார, சுயகௌரவ, சுயபாதுகாப்பு உரிமைகளுடன் வாழ ஆசைப்பட்ட தமிழினம் இன்று அடக்குமுறைகளுக்குள் சிக்கித்தவித்து வருகின்றது. அளவுக்கதிமான இராணுவ பிரசன்னமும் புலனாய்வு எனும் போர்வையில் இறக்கிவிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான அடையாளம் தெரியாத நபர்களும் மக்களை இன்று சுதந்திரமாக வாழவிடாது ஒருவித உளவியல் சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றனர்.
இன்று யுத்தம் முடிந்து சமாதான பூமியில் அனைத்து அடக்கு முறைகளை நீக்கி நிம்மதியாக அனைத்து இன மக்களையும் சமாதானமாக வாழ வழிவிடுவதே யூன் 26,  சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாளாகும். அரசு இந்நாளிற்கு ஆதரவு வழங்கி செயற்பட வேண்டும் என வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கேட்டுக்கொண்டார்.
SHARE