எகிப்தில் பேருந்து விபத்து: 19 பேர் பலி

400
எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பழமையான நகரான லக்சரில் இரு மினிபேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு அருகில் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.

நேற்று இரவு திருமண கோஷ்டியினர் இரு மினி பேருந்துகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரு பேருந்துகளும் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று முந்த முயற்சித்துள்ளது. இதில் திடீரென இரு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதி அருகிலிருந்த கால்வாய்க்குள் கவிழ்ந்தன.

விபத்து நடந்த நேரத்தில் கும்மிருட்டு காணப்பட்டதால் மீட்பு நடவடிக்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக 19 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் ஆறு பேரை மீட்பு படையினர் தொடர்ந்து தேடிவருவதாக அவசர சேவை பிரிவின் தலைவரான அபு அல்-நாகா அல்-ஹக்காகி தெரிவித்தார்.

அந்நாட்டில் சாலைகள் மிக மோசமாக உள்ளதால் அங்கு அடிக்கடி விபத்து நடைபெற்று வருகின்றது. மேலும் அங்குள்ள மக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதும் விபத்துகளுக்கு முக்கிய காரணமாகும். கடந்த வருடம் மட்டும் அந்நாட்டில் 13,000 மக்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE