எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு: மூவர் பலி

359
எகிப்து தலைநகர் கெய்ரோவில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் இருக்கும் அதன் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடித்தது. இதில் மூவர் பலியானார்கள்.

அங்குள்ள காவல் சோதனைச்சாவடியை தகர்க்கும் நோக்கில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் இரு போலீசார் கொல்லப்பட்டதுடன் சாலையில் நடந்து சென்ற ஒருவரும் பலியாகியுள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அங்கு அதிபராக இருந்த முகமது மோர்சி ஆட்சியை விலகிய நிலையில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE