எதிர்வரும் மாத முதல் வாரமளவில் விசாரணைப் பணிகள் ஆரம்பமாகும்

505
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இந்த மாத இறுதியில் இலங்கை தொடர்பிலான விசாரணை நடாத்தும் ஆணைக்குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதற்கு அமைவாக இந்த மாத இறுதியில் விசாரணை நடாத்தும் ஆணைக்குழுவிற்கான பிரதிநிதிகளை, நவனீதம்பிள்ளை பெயரிடவுள்ளார்.

எதிர்வரும் மாத முதல் வாரமளவில் விசாரணைப் பணிகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆணைக்குழு தொடர்பிலான சகல தகவல்களையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு விரைவில் அனுப்பி வைக்க உள்ளது.

விசாரணைகள் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு முன்னதாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனை பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு நியமிக்கப்படவுள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும் மூவர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினை நியமிப்பார் என சிங்கள ஊடகமொன்று ஊகம் வெளியிட்டுள்ளது.

விசாரணைகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE