இந்திய வீரர்கள் யாருடனும் போட்டி கிடையாது, எனக்கு நான் மட்டுமே போட்டி என தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்(33).
மோசமான நிலைமை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார், இவருக்குப்பதில் இடம் பெற்ற தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், உள்ளூரில் மிரட்டினாலும் அன்னியமண்ணில் சொதப்புகிறார். இதனால் ஹர்பஜன் சிங் மறுபடியும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், இத்தனை ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருவரை மட்டும் தான் போட்டியாக நினைப்பேன். அதாவது எனக்கு நான் மட்டுமே போட்டி. ஒருபோதும் அஷ்வின் அல்லது வேறுயாரையும் போட்டியாக நினைத்தது இல்லை.
நமக்கு நாமே போட்டியாக இருந்தால் தான் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக முடியும். மற்றபடி, தற்போதுள்ள இந்திய வீரர்கள் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.
என்னைப்பொறுத்தவரையில் வயது என்பது ஒரு நம்பர் மட்டும் தான். ஒருவர் 45 வயதிலும் திறமை வெளிப்படுத்தினால், அவரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்திய அணிக்காக இன்னும் விளையாட வேண்டும் என விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.