‘எழுக தமிழ்’ எழுச்­சியும் அதன் அர­சியல் முக்­கி­யத்­து­வமும் திலீபன்

261

 

‘எழுக தமிழ்’ எழுச்­சியும் அதன் அர­சியல் முக்­கி­யத்­து­வமும்
திலீபன் (நன்றி – வீரகேசரி)
14446022_192572704499873_6242027795229820952_n
எதிர்­வரும் 24ஆம் திகதி யாழ். முற்­ற­வெளியில் இடம்­பெ­ற­வுள்ள எழுக தமிழ் மக்­க­ளெ­ழுச்சி தொடர்பில் அனை­வ­ரது கவ­னமும் திரும்­பி­யி­ருக்­கி­றது. 2009இல் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்கம் இரா­ணுவ ரீதியில் வீழ்ச்­சி­ய­டைந்ததன் பின்னர் வடக்கில் இடம்­பெறும் மிக முக்­கி­ய­மா­ன­தொரு மக்கள் நிகழ்­வா­கவே மேற்­படி எழுக தமிழ் நோக்­கப்­ப­டு­கி­றது. தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் இடம்­பெறும் இந்­நி­கழ்­விற்கு வடக்­கி­லுள்ள ஆட்டோ ஓட்­டுனர் சங்கம் தொடங்கி சிகை அலங்­க­ரிப்­பாளர் சங்கம் வரையில் ஆத­ரவு தெரிவித்­தி­ருக்­கின்­றன. நீண்ட காலத்­திற்கு பின்னர் இவ்­வாறு மக்கள் அமைப்­புக்கள் பலவும் ஒரு மக்­க­ளெ­ழுச்­சிக்கு ஆத­ரவு தொிவித்­தி­ருப்­பது இதுவே முதல் தட­வை­யாகும். இறு­தி­யாக பொங்கு தமிழ் நிகழ்­விற்கே வடக்கின் மக்கள் அமைப்­புக்கள் அனைத்தும் இவ்­வாறான­தொரு ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தன.
கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­ட­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பின்­வரும் நான்கு கோரிக்­கை­களின் அடிப்­ப­டையில் இந்­நி­கழ்வு இடம்­பெ­ற­வுள்­ளது.
அவை­யா­வன, தமிழர் தாயகப் பகு­தியை ஆக்­கி­ர­மித்து நின்று, அதன் தனித்­து­வத்தை அழிக்கும் வேலைத்­திட்­டங்­களில் பங்­கேற்று பாது­காப்­பு­ம­ளிக்கும் அரச பாது­காப்பு படைகள் எமது மண்­ணி­லி­ருந்து அகற்­றப்­பட வேண்டும், கடந்த முப்­பது வரு­டங்­க­ளாக எமது மக்கள் நடுத்­தெ­ருவில் நிற்க அவர்­களின் பூர்­வீக நிலங்­களை ஆக்கி­ர­மித்­தி­ருக்கும் அர­ச­ப­டைகள் உட­ன­டி­யாக அவற்­றி­லி­ருந்து வெளியேற்­றப்­பட்டு, அந்த நிலங்கள் எமது மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட வேண்டும், இறுதி யுத்­தத்தின் போதும் அதற்கு முன்­னரும் பின்­னரும் கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட ஒவ்­வொரு தமிழ் மகனும் மகளும் எங்­கி­ருக்­கின்­றனர் அல்­லது அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது கண்­ட­றி­யப்­பட்டு பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும், அனைத்து அர­சியல் கைதி­களும் நிபந்­த­னை­யின்றி உடன் விடு­விக்­கப்­பட வேண்டும், யுத்தக் குற்­றங்கள் இன­வ­ழிப்பு தொடர்பில் பக்­கச்­சார்­பற்ற ஒரு சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும். மேற்­படி ஐந்து கோரிக்­கைகளின் அடிப்­ப­டை­யி­லேயே எழுக தமிழில் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இவை நியா­ய­மான கோரிக்­கைகள், இவற்றை முன்­னி­றுத்தி அணி­தி­ரள்­வ­தற்கும் குரல் கொடுப்­ப­தற்கும் தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­யுண்டு என்­பதை ஏற்­றுக்­கொண்ட கட்­சி­களும் சிவில் அமைப்­புக்­களும் எழுக தமி­ழுக்­காக ஒன்­றி­ணைந்­தி­ருக்­கின்­றன. அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவக் கட்­சி­க­ளான சித்­தார்த்தன் தலை­மை­யி­லான ஜன­நா­யக மக்கள் விடு­தலை முன்­னணி (புளொட்) சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி மற்றும் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­னணி ஆகிய பிர­தான தமிழ் தேசிய அர­சியல் கட்­சி­களும் தமிழ் சிவில் சமூக அமைப்­புக்­களும் இந்­நி­கழ்­விற்­காக ஒன்­று­பட்­டி­ருக்­கின்­றன. ஏனை­யோ­ரையும் விலகி நிற்­காது மக்­களின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்­காக அணி­தி­ர­ளு­மாறும் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்­றன.
எழுக தமிழ் எழுச்சி நிகழ்­விற்­கான திகதி அறி­விக்­கப்­பட்ட நாளி­லி­ருந்து அதனை குழப்­பு­வ­தற்­கான பல்­வேறு முயற்­சி­களும் திரை­ம­றைவில் இடம்­பெற்று வந்­தி­ருக்­கின்­றன. இவ்­வா­றா­ன­தொரு பின்­பு­லத்­தில்தான் ஆரம்­பத்தில் இது­போன்ற எழுச்சி நிகழ்­வுகள் அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்­தி­வந்த தமி­ழ­ரசு கட்சி திடீரென இதில் பங்­கு­கொள்ளப் போவ­தில்லை என்று அறி­வித்­தி­ருக்­கி­றது. ஒரு தனிக் கட்­சி­யாக இருந்த போதும், தமிழ­ரசு கட்­சியின் முடி­வு­களை தாண்டிச் செல்­லு­மாற்­றலற்ற தமி­ழீழ விடு­தலை இயக்­கமும் (ரெலோ) இந்­நிகழ்­வுக்­கான ஆத­ரவை வழங்­க­வில்லை. இத்­த­னைக்கும் ரெலோவின் தலை­வர்கள் சிலர் ஜெனி­வாவில் போய் போரா­டு­வ­தாக அறிக்­கைகள் விட்டுக் கொண்­டி­ருந்­த­வர்கள். குறிப்­பாக சிவா­ஜி­லிங்கம் போன்­ற­வர்கள். ஆனால் தங்­க­ளுக்கு அருகில் நடக்கும் ஒரு மக்கள் எழுச்­சிக்கு ஆத­ரவு தெரிவிக்க முடி­யா­த­வர்­க­ளா­கவே இருப்­பதும் பல­ருக்கும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ஏன் இந்­த­ளவு அர­சாங்­கத்தை எதிர்க்க இவர்கள் பயப்­ப­டு­கின்­றனர் அல்­லது அடுத்த தேர்­தலில் தங்­க­ளுக்கு ஆசனம் கிடைக்­காது என்னும் பயமா? இதே தினத்தில் நாங்கள் விட்­டில்கள் அல்ல என்னும் தலைப்­பி­லான கவிதை நூல் நிகழ்­வொன்றில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­தனும் தமி­ழ­ரசு கட்­சியின் தலைவர் மாவை சேனா­தியும் கலந்து கொள்ள­வுள்­ள­தாக செய்­திகள் தெரிவிக்­கின்­றன.
தமிழ் மக்கள் தங்­களின் உரி­மை­க­ளுக்காக அணி­தி­ரண்டு தங்­களின் கோரிக்கை­களை அர­சாங்­கத்­திற்கும் சர்­வ­தே­சத்­திற்கும் உரத்துச் சொல்ல முற்­ப­டு­கின்ற ஒரு தினத்தில் சம்­பந்­தனும் மாவையும் கவிதை நூல் நிகழ்­வொன்றில் பங்­கு­கொள்­ளு­கின்­றனர் என்­பது எந்­த­ள­விற்கு அவர்கள் மக்­களின் பிரச்­சி­னைக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கின்­றனர் என்­ப­தற்­கான சான்­றாகும்.
உண்­மையில் தமி­ழ­ரசுக் கட்சி இதனை எதிர்த்து நிற்­ப­தற்கு ஒரு நியா­ய­மான கார­ணமும் இல்லை. ஏனெனில் கடந்த பாரா­ளு­மன்­றத்தில் தமி­ழ­ரசு கட்­சியின் வீட்டுச் சின்­னத்தின் கீழ் முன்­வைக்­கப்­பட்ட தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் கோரிக்­கை­க­ளைத்தான் தமிழ் மக்கள் பேர­வையும் முன்­வைத்­தி­ருக்­கி­றது. இதன் கார­ண­மா­கவே கூட்­ட­மைப்பில் அங்­கத்­துவம் வகிக்கும் சித்­தார்த்­தனும் சுரேஷ் பிரேமச்­சந்­தி­ரனும் இதனை ஆத­ரிப்­ப­தற்­கான காரணம். ஒரு வேளை கூட்­ட­மைப்பின் கொள்கை நிலைப்­பாட்­டிற்கு முரண்­பா­டான விட­யங்கள் இருந்­தி­ருந்தால் அவர்கள் இதற்கு ஆத­ரவு தெரிவித்­தி­ருக்க மாட்­டார்கள். அவர்கள் மட்­டு­மன்றி கூட்­ட­மைப்பை ஆத­ரித்து நிற்கும் பல புத்­தி­ஜீ­விகள், அர­சியல் சிந்­த­னை­யா­ளர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் என பலரும் இதனை ஆத­ரித்து நிற்­ப­தற்­கான கார­ணமும் அதுவே.
நிலைமை அவ்­வா­றி­ருக்க, தங்­க­ளது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திற்கே தமி­ழ­ரசு கட்சி எதி­ராக நிற்­பது அவ்­வா­றான புத்­தி­ஜீ­விகள் மத்­தியில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக அவர்கள் தெரிவித்­தனர். இத்­த­னைக்கும் அவ்­வப்­போது போராடப் போவ­தாக அறிக்­கைகள் விட்­ட­வ­ரான மாவை சேனாதிராஜா உண்­மை­யி­லேயே அவ்­வா­றா­ன­தொரு மக்கள் எழுச்­சிக்­கான ஏற்­பா­டுகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்ற இவ்­வா­றா­ன­தொரு சூழலில், அதற்கு எதி­ராக நிற்­பது விந்­தை­யிலும் விந்­தை­யாகும் என்றும் அவர்கள் கூறு­கின்­றனர். அவ்­வா­றானால் தேர்தல் காலத்தில் முன்­வைக்­கப்­பட்ட கோசங்­களும் போராட்­டத்­திற்­கான அறை கூவல்­களும் வெறும் வாக்கு சேக­ரிப்­ப­தற்­காக சொல்­லப்­பட்­ட­வை­களா? தமி­ழ­ரசு கட்­சியின் இளக்­கா­ர­மான இத்­த­கைய செயற்­பாடு மிகவும் ஏமாற்­ற­ம­ளிப்­ப­தா­கவே பலரும் கரு­து­கின்­றனர்.
இவ்வாறான கருத்துக்கள் நிலவுகின்ற போதிலும் போராட்டத்தை நடத்துவதன் மூலம் தற்போது முன்னெடுக்கப்படும் அரசியல்தீர்வுக்கான நடவடிக்கைகளில் பின்னேற்றம் ஏற்படலாம் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் கருதுவதாக தெரிகின்றது. சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் அரசியல் தீர்வொன்றை பெறுவதற்கான சந்தர்ப்பம் கைகூடியுள்ள நிலையில் அதனை குழப்பாது சிறிது காலத்துக்காவது அரசாங்கத்துடன் ஒத்துழைத்து முயற்சிசெய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் தமிழரசுக் கட்சியின் தலைமை நிற்பதாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது.
ஆனாலும் அழுத்தமொன்றை கொடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் காண் பிக்கக் கூடிய நிலை உருவாகும்.
இந்த நிகழ்வில் அதி­க­ள­வான மக்கள் திரண்­டு­விடக் கூடா­தென்று அர­சாங்கத் தரப்­புக்­களும் விரும்­பு­வ­தா­கவே தக­வல்கள் கசிந்­தி­ருக்­கின்­றன. ஏனெனில் தமிழ் மக்கள் தங்­களின் அடிப்­ப­டை­யான அர­சியல் கோரிக்­கை­களை கைவிட்­டு­விட்­டனர், அவர்கள் தாங்கள் முன்­வைக்கும் ஒரு தீர்வை (அரை­கு­றை­யான) ஏற்றுக் கொள்­வார்கள் என்று அர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்தை ஏமாற்­றி ­வரு­கின்ற சூழலில்தான் இவ்­வா­றா­ன­தொரு எழுச்சி ஏற்­பா­டா­கி­யி­ருக்­கி­றது. எனவே, எவ்­வா­றா­யினும் இதில் அதி­க­ளவு மக்கள் கலந்­து­கொள்­ளாது பார்த்துக் கொண்டால் தங்­களின் அர­சியல் நிலைப்­பாட்டை சரி­யென்று நிரூ­பிக்க முடி­யு­மென்றே அர­சாங்கம் கரு­து­கின்­றது. இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணி­யில்தான் ஆரம்­பத்தில் இது­போன்ற நிர்­ப்பந்­திக்கும் நிகழ்­வுகள் அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்தி வந்த தமி­ழ­ரசு கட்சி தற்­போது இதனை எதிர்த்து நிற்­கி­றது. உண்­மையில் இது மக்களின் நியா­ய­மான கோரிக்­கைக­ளுக்கு எதி­ரான ஒரு செயற்­பாடாகும்.
ஆட்சி மாற்­றத்­திற்கு பின்­னரும் கூட அர­சாங்கம் சிங்­கள மய­மாக்கல் நிகழ்­சித்­திட்­டத்தை நிறுத்­த­வில்லை. சிங்­கள தேசத்தின் குரல்­வ­ளையை நெரித்துக் கொண்­டி­ருந்த சர்­வ­தேச அழுத்­தங்­க­ளி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக எங்­களின் வாக்­கு­களை பயன்­ப­டுத்திக் கொண்டு, இன்று மீண்டும் தன்­னு­டைய ஏமாற்றும் பட­லத்தை ஆரம்­பித்து விட்­டது. இவ்­வா­றா­ன­தொரு சூழலில் தமிழ் தலை­மைகள் தொடர்ந்தும் அமை­தி­யாக இருப்­பார்­க­ளாக இருந்தால் அது மறை­மு­க­மாக அர­சாங்கம் செய்­வ­தை­யெல்லாம் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவே பொருள் கொள்­ளப்­படும். சரி­யான தரு­ணத்தில் மேற்­கொள்­ளப்­படும் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­கள்தான் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கப் பயன்படும் என்னும் அடிப்படையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறும் எழுக தமிழை முக்கிய அரசியல் கட்சிகளும் சிவில் சமூகத் தலைவர்களும் மதத்தலைவர்களும் ஆதரித்து நிற்கின்றனர். எழுக தமிழில் தங்களை தமிழர்களாக உணரும் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் அணிதிரள்வர் என்பதே இதனை ஏற்பாடு செய்பவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அவர்களின் நம்பிக்கையின் வெற்றி என்பது மக்களின் வெற்றியாகும்.

SHARE