ஏமனில் கிளர்ச்சியாளர்கள்-இஸ்லாமியர்கள் மோதல்: 35 பேர் சாவு

408
ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்களுக்கும் இஸ்லாமிய பழங்குடியினருக்குமிடையே நடந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த 35 பேர் இறந்தனர்.

நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஜோப் மாகாணத்தில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹாவ்தி கிளர்ச்சியாளர்களுக்கும், பழமைவாத சன்னி இஸ்லாமிய பழங்குடியினருக்குமிடையே நேற்று முதல் கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும் பீரங்கி மற்றும் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக உள்ளூர் ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இதில் இதுவரை 35 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் ஹாவ்தி கிளர்ச்சியாளக்ள் வடக்குப் பகுதியில் உள்ள அம்ரான் மாகாணத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ஏற்கனவே சாடா மாகாணமும் அவர்களின் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE