ஐநா விசாரணைக் குழு விபரங்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அரசாங்கத்துக்கு அறிவிப்பு

504

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான நியமிக்கப்பட்டுள்ள, விசாரணைக் குழுவின் விபரங்களை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார்.

விசாரணைக் குழுவின் விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தினால், கடந்த வாரம், ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக் குழு தொடர்பான  இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு, நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது அமர்வில், வெளியிடப்படவுள்ளது.

ஜெனிவாவில் உள்ள  இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

LLRC-Cartoon

SHARE