ஐபோனின் அடுத்த புதிய மொடலில் இவ்வளவு சிறப்புகளா! கசிந்த தகவல்கள்

380

 

ஐபோன் தயாரிக்கும் புதிய மொடலான SE 4 தொடர்பில் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் SE மொடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நான்காம் தலைமுறை ஐபோன் SE மொடலில் 6.1 இன்ச் எல்சிடி ஸ்கிரீன் மற்றும் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது.

இந்த மொடல் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். 2024 வாக்கில் அறிமுகமாகும் ஐபோன்களில் யுஎஸ்பி டைப் சி ரக சார்ஜர்கள் வழங்கப்பட வேண்டும் என ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தி இருக்கிறது.

இதன் காரணமாக ஐபோன் SE 4 மாடலில் யுஎஸ்பி சி போர்ட் வழங்கப்படலாம். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஐபோன் SE 4 மாடலில் 6.1 இன்ச் நாட்ச் டிஸ்ப்ளே, ஃபேஸ் ஐடி, டச் ஐடி ஹோம் பட்டன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அதே போல SE 4ல் ஃபேஸ் ஐடிக்கு பதிலாக முந்தைய மாடல்களைப் போல டச் ஐடியுடன் உருவாக்கப்படலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE