ஐபோனில் போலி! அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள்.

64

 

* போலியான ஐபோன்களும் ஓன்லைனில் விற்கப்படுகின்றன.

* புதிய ஐபோன் மொடல் iOS கொண்டு இயங்குவதை உறுதி செய்துகொள்ளலாம்.

பணத்தை அள்ளி கொடுத்து தான் ஐபோனை வாங்குகிறோம். அப்படி வாங்கும் ஐபோன் போலியானது என தெரிந்தால் நமது மனம் எப்படி பாடுபடும்?

ஆம்! சிறப்பு சலுகை, பண்டிகை ஆபர் என கூறி ஓன்லைனில் போலியான ஐபோன்களை விற்பனை செய்வது ஜரூராக நடக்கிறது.

உங்கள் கையில் இருப்பது ஒரிஜினல் ஐபோனா அல்லது Fake iPhone-ஆ என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

IMEI எண்

புதிய ஐபோன் மாடலின் IMEI நம்பரை கண்டுபிடிக்க, முதலில் ஐபோனின் Settings-க்கு செல்ல வேண்டும். பின்னர் General என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு About என்கிற விருப்பத்தை கிளிக் செய்து, ஸ்க்ரோல் டவுன் செய்ய அங்கே உங்களால் IMEI நம்பரை பார்க்க முடியும். ஒருவேளை IMEI அல்லது சீரியல் நம்பர் என எதையுமே காண முடியவில்லை என்றால், அது போலியான ஐபோன் மொடலாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆப்ரேட்டிங் சிஸ்டம்

ஐபோன்கள் iOS மூலம் இயங்குகின்றன. ஒட்டுமொத்த தோற்றம், யூசர் இன்டர்பேஸ் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் iOS ஆனது Android ஓஎஸ்-ஐ விட மிகவும் வேறுபட்டது. எனவே புதிய ஐபோன் மொடல் iOS கொண்டு இயங்குவதை உறுதி செய்துகொள்ளலாம்.

தோற்றம்

போலி ஐபோன்கள் பெரும்பாலும் ஒரிஜினலை விட மிகவும் மட்டமான அல்லது மலிவான உருவாக்கத்தையே பெறும். கொஞ்சம் உற்று நோக்கினால் சற்று வித்தியாசமான வடிவமைப்பை கொண்டிருப்பதை காணலாம். எனவே, ஓன்லைன் வழியாக புதிய ஐபோனை வாங்கும் போதெல்லாம், அதன் தோற்றத்தை கவனிக்க வேண்டும்.

லைட்னிங் கனெக்டர்

பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களைப் போல, ஐபோன்கள் USB Type-C போர்ட்டுடன் வருவதில்லை, எனவே ஐபோன்களை வாங்கும் போதெல்லாம் அதில் லைட்னிங் கனெக்டர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேற்கண்ட எதுவுமே இல்லை என்றால், அது நிச்சயம் போலி தான்.

 

SHARE