ஐ.எஸ். இலக்குகள் மீது தாக்குதல்கள் ஆரம்பம்.

327

சிரியாவிலுள்ள ஐ.எஸ் குழுவினரின் நிலைகளை இலக்கு வைத்து பிரித்தானியா தனது முதலாவது விமானத் தாக்குதலை நடத்தி உள்ளது.

நேற்று அந் நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல் தொடர்பாக 10 மணிநேர விவாதம் நடைபெற்றுள்ளது.

பின்னர் இது தொடர்பான வாக்குப்பதிவு இடம்பெற்ற போது இதற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதல்களை யுத்தம் என வெளிநாட்டு ஊடகங்கள் வர்ணித்துள்ளன. இதற்காக பெரும் தொகை போர்த்தளபாடங்களை பிரித்தானியா பயன்படுத்தவுள்ளது.

அங்கு தொடர்ந்தும் தாக்குதல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.isis 01isis 02isis 03isis 04isis 05isis 06isis

SHARE