ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் பாலியல் திறனை மேம்படுத்த மனைவிகளுடன் கொடூரமான வகையில் உறவு கொள்வதாக தகவல்கள்

378

 

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் பாலியல் திறனை மேம்படுத்த மனைவிகளுடன் கொடூரமான வகையில் உறவு கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பலரை கொன்று குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தீவிரவாதிகள் தங்களது காமவெறியை தணித்து கொள்ள பெண்களை மிகவும் துன்புறுத்தி வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது, தாங்கள் கடத்த வந்த சிறுமிகள், பெண்களை மனைவிகளாக்கி அவர்களுக்கு அழகிய உள்ளாடைகள் வாங்கிக் கொடுக்க தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை செலவு செய்கின்றனர்.

இதனை தொடர்ந்து அவர்களை சிறிது காலம் பாலியல் அடிமைகளாக வைத்திருந்துவிட்டு, பின்னர் அவர்களை விபச்சார சந்தையில் விலைபேசி விற்றுவிடுகிறார்கள்.

மேலும் தீவிரவாதிகளுக்கு காமத்தின் மீதுள்ள மோகம் அதிகமுள்ளதால், அவர்கள் வயாக்ரா (Viagra) சாப்பிடுவது மற்றும் இயற்கைக்கு புறம்பாக உறவு கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது, அவர்களின் பிடியிலுள்ள பெண்களுக்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் பல பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அஞ்சுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE