ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்த 100 இந்திய இஸ்லாமிய இளைஞர்கள்

362
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை பிடித்து அப்பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடு என்று பெயரிட்டு அரசு அமைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் இந்தியாவில் உள்ள ஏழை இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து அந்த இயக்கத்தில் சேர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவிலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் உள்ள ஏழை இஸ்லாமிய இளைஞர்களை அவர்கள் மூளைச்சலவை செய்து சேர்த்துள்ளதாக தெரிகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்த தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைப்புகள் கூறுகின்றன.

தேசிய புலனாய்வு நிறுவனத்தால் தேடப்படும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி ஒருவன் ஆன் லைனில் ஐ.எஸ்.ஐ.எஸ். பிரச்சார வீடியோவை வெளியிட்டு இந்தியாவில் உள்ள ஏழை இஸ்லாமிய இளைஞர்களை சேர்த்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE