ஐ. நா. குழுவை அனுமதிப்பதா? 17 இல் தீர்மானம்-

365

மனித உரிமைகள் பேரவையின் விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதா கூடாதா என்பது தொடர்பான பிரேரணை ஒன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்படவுள்ளது. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே இதனை முன்வைக்கவுள்ளனர். அதே தினத்தில் இதனை விவாதத்துக்கு எடுத்து வாக்கெடுப்புக்கு விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த பிரேரணையை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் ஏனைய பிரதான  கட்சித் தலைவர்கள் கூடி ஆராயப்படவுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் தாம் இதுவரை எந்தவிதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.ஏனைய சில கட்சிகளும் இதே நிலைப்பாட்டினையே கொண்டுள்ளன.

SHARE