ஐ.நா மனித உரிமை ஆணையாளரை சந்தித்த வீரம் செறிந்த அனந்தி சசிதரன்

377
hussain_anandi_met_002

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின்  புதிய ஆணையாளர் இளவசர் செய்ட் அல் ஹூசைனை நேற்று காலை சந்தித்துள்ளார்.

சிறார் மற்றும் பெண்கள் மரணம் தொடர்பான குழுக் கூட்டத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிவில் அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் ஆணையாளரை சந்தித்து பேசியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரனும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

இங்கு உரையாற்றிய மனித உரிமை ஆணையாளர் ஹூசைன், வருடாந்தம் 5 வயதுக்கும் குறைவான 6 மில்லியன் சிறார்கள் இறப்பதாக தெரிவித்துள்ளார்.

வறுமை, தாய்மாரின் அறியாமை என்பன இதற்கு காரணமாக அமைந்துள்ளன எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனந்தி சசிதரன் உள்ளிட்ட பிரதிநிதிகள், இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் சிறார்கள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கி வரும் நிலைமைகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

SHARE