ஒரே மாதத்தில் இரண்டு படம் ரிலீஸ். உற்சகாத்தில் ஜெய்!

413

இளம் கதாநாயக நடிகர்களில் சற்று பின் தங்கியே இருக்கிறார் ஜெய். இத்தனைக்கும் ஜெய் நடித்த சுப்பிரமணியுபரம், சென்னை 60028, ராஜாராணி போன்ற பல படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. ஆனால் எந்த வெற்றியையும் அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதே இல்லை. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அவரை தொடர்பு கொண்டால் எந்நேரமும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதும் ஜெய்யின் மந்தநிலைக்கு முக்கிய காரணம். அதனாலேயே அவரது கேரியர் கிராஃப் ஏற்றம் இல்லாமலே காணப்பட்டது.
இந்நிலையில் வடகறி, திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய இரண்டு படங்களில் நீண்டகாலமாக நடித்து வந்தார். தயாநிதி அழகிரி தயாரித்த வடகறி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பல மாதங்களாகியும் அப்படத்தின் ரிலீஸ் பற்றி ஒரு தகவலுமில்லை. இன்னொரு பக்கம், ஃபர்ஸ்ட் காப்பி ரெடியாகியும் வருடக்கணக்கில் கிடப்பில் கிடந்தது – திருமணம் எனும் நிக்காஹ் படம்.
ஒருவழியாக, திருமணம் எனும் நிக்காஹ் படம் இம்மாதம் வெளியாக இருந்தது. திடீரென நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஜெய் நடித்த வடகறி படத்தையும் ஜூன் மாதம் திரைக்குக் கொண்டுவர இருக்கிறார்கள். ஆக,வடகறி, திருமணம் எனும் நிக்காஹ் என ஜெய் நடித்த இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. உற்சாகத்தில் இருக்கிறாராம் ஜெய்.

 

SHARE