கங்கனாவைப்போல் நான் இருப்பதாக கூறினால் மகிழ்ச்சியே

23

ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்ஸிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இவர் தற்போது தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிக்க வருவதற்கு முன்பாக படித்துக் கொண்டிருக்கும்போது, மாடலிங் துறையில் ஈடுபடுவதில் கவனம் செலுத்தினார். அந்த நாட்களில் அவருக்குப் பயிற்சிக்கொடுத்த போது பயிற்சியாளரால் தான் அவமதிக்கப்பட்டதைச் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் அவரோடு தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் கங்கனா ரணாவத்தை நேரில் பார்த்தால் என்ன தோன்றும் என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “கங்கனாவைப் பார்த்தால் ஹலோ சொல்லுவேன். கங்கனா நல்ல நடிகை. அவரைப்போல நான் இருப்பதாக யாராவது சொன்னால் எனக்கு மகிழ்ச்சியே” என்று குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

maalaimalar

SHARE