கடற்புலிகளின் முக்கிய தளபதிகள் தென்னாபிரிக்காவில்…

596

விடுதலைப்புலிகளின் கடற்புலி விசேட புலனாய்வுப்பரிவினர் தென்னாபிரிக்காவின் கிழக்குக் கடற்கரைப்பகுதிகளில் இயங்கிவருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தற்பொழுது இவர்கள் மீண்டும் இலங்கைக்குள் எவ்வாறு கடற்பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டு எல்லைக்குள் கொண்டுவருவது தொடர்பான பயிற்சிகள் அங்கு அளிக்கப்பட்டுவருவதாவும், அமெரிக்க அரசின் உதவியுடன் இவர்களுக்கான சிறப்புப்பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுவருகின்றது. 2009 ஆம் ஆண்டு 5ம் மாதமளவில் கடற்புலிகளின் விசேட புலனாய்வுப்பிரிவினர்களுக்கு தென்னாபிரிக்க அரசின் உத்தரவுடன் அடைக்கலம் வழங்கப்பட்டதாகவும் அச்செய்திகளில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இதனை மட்டுமல்ல நெடியவன், உருத்திரகுமார் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசின் பல அங்கத்தவர்களும் இதனது வளர்ச்சிக்கு உந்துசக்தியாக செயற்பட்டு வருவதாகவும், தமிழ் மக்களுக்கான தீர்வு எட்டப்படாத பட்சத்தில் சிரியா, லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்க அரசு எவ்வாறு போர் நடவடிக்கைகளை மேற்கொண்டதோ அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசு உதவிவருவதாகவும் மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

SHARE