கடும் வரட்சி காரணமாக கிளிநொச்சியில் நாளாந்தம் 371,850 குடிநீர் விநியோகம்…

588
 

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்;டில் பிரதேச செயலகங்கள் ஊடாகவும்,மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மூலமும் பல கிராமங்களுக்கும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் தொடர்ச்சியாக கிணறுகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து செல்வதனால் மக்களுக்கான குடிநீர் தேவையும் அதிகரித்து செல்கிறது.

கிளிநொச்சியில் நிலவும் வழமைக்கு மாறான வரட்சி காரணமாக பெரும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளும் வகையில் மேலும் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையியற் குழுக் கூட்டத்தில் விடுத்த அவசர கோரிக்கைக்கு அமைவாக கிளிநொச்சிக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால், கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்கள் ஊடாகவும் நாளாந்தம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தோடு பிரதேசபைகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் எரிபொருள் வழங்க்கப்பட்டு சபைகள் மூலமும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.

அதனடிப்படையில்

பளை

பிரதேச செயலகம் மூலம்

கோவில்வயல் 4000 லீற்றா,; புலோப்பளை 8000 லீற்றர், புலோப்பளை மேற்கு 8000 லீற்றர், கச்சார்வெளி 8000 லீற்றர், அல்லிப்பளை 4000 லீற்றர் என்றடிபப்படையிலும்,

பிரதேச சபை மூலம்

வேம்பொடுகேணி 4000 லீற்றர், கிளாலி 6000 லீற்றர், அரசர்கேணி 2000 லீற்றர், முகமாலை பாடசாலை 1000 லீற்றர், இத்தாவில் 3000 லீற்றர், இயக்கச்சி 6000 லீற்றர், பளை நகரம் (பாடசாலை) 2000 லீற்றர்.

கரைச்சி

பிரதேச செயலகம் மூலம்

வன்னேரிக்குளம் 8000 லீற்றர், ஆணைவிழுந்தான் 8000 லீற்றர், கண்ணகைபுரம் 8000 லீற்றர், ஸ்கந்தபுரம் 8000 லீற்றர், அக்கராயன்குளம் 4000 லீற்றர், கோணவில் 16000 லீற்றர், அம்பாள்குளம் 16000 லீற்றர், அம்பாள்நாகர் 20000 லீற்றர், உருத்திரபுரம் வடக்கு 8000 லீற்றர், உருத்திரபுரம் மேற்கு 4000 லீற்றர், பெரியபரந்தன் 4000 லீற்றர், வட்டக்கச்சி 4000 லீற்றர், மாயவனூர் 16000 லீற்றர், மாவடியம்மன் 8000 லீற்றர், இராமநாதபுரம் 8000 லீற்றர்

பிரதேச சபை மூலம்

தொண்டமான்நகர் 3000 லீற்றர், தட்டவன்கொட்டி.4000 லீற்றர், ஆனையிறவு,உமையாள்புரம் 2800 லீற்றர்.

கண்டாவளை

பிரதேச செயலகம் மூலம்.

தர்மபரம் கிழக்கு 6000 லீற்றர், தர்மபுரம் மேற்கு 4500 லீற்றர், உழவனூர் 2000 லீற்றர், நாதன் திட்டம் 2000 லீற்றர், கண்ணநகர் 4000 லீற்றர்,புன்னைநீராவி பாடசாலை 1000 லீற்றர், முசுறன்பிட்டி இந்தியன் வீட்டுத்திட்டம் 4500 லீற்றர், ஊரியான் 2500 லீற்றர், கண்டாவளை 10000 லீற்றர், கல்லாறு 13000 லீற்றர், கல்லாறு பாடசாலை 1500 லீற்றர், பிரமந்தனாறு பாடசாலை 1500 லீற்றர், பெரியகுளம் ஜயனார் வித்தியாலயம் 500 லீற்றர், கல்மடுநகர் 4500 லீற்றர்,பரந்தன் 4000 லீற்றர்.

பூநகரி.

பிரதேச செயலகம் மூலம்

பரமன்கிராய் பாடசாலை 400 லீற்றர்,பூநகரி மத்திய கல்லூரி 1000 லீற்றர்,ஞானமடம் பாடசாலை 400 லீற்றர்,கறுக்காய்த்தீவு மவி 750 லீற்றர் செல்லியாதீவு 500 லீற்றர், சுன்னாவில் பாடசாலை 400 லீற்றர் ,விக்கினேஸ்வரா வித்தியாலயம் 750 லீற்றர், செம்மன்குன்று பாடசாலை 400 லீற்றர் நல்லூர் மவி 750 லீற்றர் செல்லிபுரம் முன்பள்ளி 200 லீற்றர் ஞானிமடம் செட்டியகுறிச்சி 10,000 லீற்றர்.

பிரதேச சபை

கொள்ளக்குறிச்சி 1000 லீற்றர், மட்டுவில்நாடு கிழக்கு 3000 லீற்றர், பள்ளிக்குடா 7000 லீற்றர், மட்டுவில்நாடு மேற்கு 4000 லீற்றர், பரமன்கிராய் 3000 லீற்றர்,;, நாச்சிக்குடா 2000 லீற்றர், பொன்னாவெளி 22000 லீற்றர், (வேரவில்,பாடசலை வைத்தியசாலை வலைப்பாடு பாடசாலை) இரனைமாதாநகர் 6000 லீற்றர், வாடியடி வைத்தியசாலை 4000 லீற்றர்.கரியாலைநாகபடுவான் 1000 லீற்றர்

இதேவேளை கிளிநொச்சியில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் கிளிநொச்சி நகர குடிநீர் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ள கிராமங்களில் 35 நீர்தாங்கிகள்; வைக்கப்பட்டு 35000 லீற்றர் குடி நீர் நாளாந்தம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பாரதிபுரம் 5000 லீற்றர்,பொன்னகர் 9000 லீற்றர்,மலையாளபுரம் 4000 லீற்றர்,விவேகானந்தநகர் 1000 லீற்றர்,கிருஸ்ணபுரம் 2000 லீற்றர்,உதயநகர் கிழக்கு 1000 லீற்றர்,ஆனந்தநகர் 2000 லீற்றர்,கனேசபுரம் 3000 லீற்றர்,காஞ்சிபுரம் 2000 லீற்றர்,கமரிக்குடா 1000 லீற்றரும் விநியோகிக்கப்படுகிறது.

மேலும் கிளிநொச்சியில் மேலதிகமாக குடிநீர் தேவைப்படும் பிரதேசங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் வகையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இன்று(15) 1000 லீற்றர் நீர்த் தாங்கிகள் 40 கொள்வனவு செய்யப்பட்டு நீர் விநியோக நடவடிக்கைள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 50 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் மேற்க்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சியில் நிலவி வருகின்ற கடும் வரட்சி காரணமாக மக்களுக்கான குடிநீர் தேவை மேலும் அதிகரித்துச் செல்வதனால் அனர்த்த முகாமைத்து அமைச்சிடம் விடு;த்த வேண்டுகோளுக்கு அமைவாக மேலதிக நிதி குடிநீர் விநியோகத்தற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு ஊடாக படிப்படியாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

SHARE