கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் வார்னர்..தோல்வியை தான் பரிசளிப்போம் – பாகிஸ்தான் வீரர் சூளுரை

51

 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் வெற்றியுடன் திரும்ப விடமாட்டோம் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி சூளுரைத்துள்ளார்.

டெஸ்ட் தொடர்
டிசம்பர் 14ஆம் திகதி அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

அவுஸ்திரேலியாவின் அனுபவ வீரரான டேவிட் வார்னருக்கு இது கடைசி டெஸ்ட் தொடர் ஆகும்.

கான்பெர்ராவில் 6ஆம் திகதி பயிற்சி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக பாகிஸ்தான் அணி அங்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

வார்னர் குறித்து பேசிய அப்ரிடி
அப்போது ஊடகத்திடம் பேசிய வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, ‘டேவிட் வார்னரின் இரண்டாவது இன்னிங்ஸிற்கு வாழ்த்துக்கள். ஆனால் வெற்றியுடன் டேவிட் வார்னர் விடைபெற மாட்டார் என்று நம்புகிறேன். ஏனென்றால் எங்களுக்கு எதிராக கடைசி போட்டியில் அவர் களமிறங்குகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் நாங்கள் முதலிடத்தில் உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

109 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர், 25 சதங்கள் மற்றும் 36 அரைசதங்களுடன் 8487 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

அதேபோல் பாகிஸ்தானின் ஷாஹீன் ஷா அப்ரிடி 27 போட்டிகளில் 105 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 6/51 ஆகும்.

SHARE