கட்டிப்பிடித்து மரணத்தை வரவேற்ற தொழிலாளிகள்.

399
சென்னை கட்டிட விபத்தில் கட்டிப்பிடித்த நிலையில் இறந்து கிடந்த இரண்டு தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
5 வது நாள் மீட்புப் பணியின்போது தரைத் தளத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டியபோது கட்டிப்பிடித்த நிலையில் இருந்த 2 ஆண் சடலங்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.

கட்டிடம் இடிந்து விழுந்தபோது அருகே நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் சாவை கண் எதிரே பார்த்த அச்சத்திலும், அதிர்ச்சியிலும் இருவரும் கட்டிப்பிடித்தபடி இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் இருவரும் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE