கணவனுக்கு போதைப்பொருள் கடத்திய மனைவி கைது

37

 

சிறைச்சாலையில் உள்ள தனது கணவருக்காக சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப் பொருளை கடத்த முற்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை சிறைச்சாலையில் இருக்கும் வாத்துவ, வேரகம, அல்விஸ்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தூக்கி வந்த ஏழு மாத ஆண்குழந்தை பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவின் கட்டுப்பாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள்

குறித்த பெண் தனது கணவரைப் பார்வையிடுவதற்காக களுத்துறை சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார். அவர் எடுத்து வந்த பொருட்களை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது குறித்த பெண் தனது கணவருக்கு வழங்குவதற்காக எடுத்து வந்திருந்த கட்டைக் காற்சட்டையின் ஓர மடிப்புத் தையலின் உள்ளே சூட்சுமமான முறையில் போதைப் பொருள் மறைத்து வைத்திருப்பதை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அதனையடுத்து, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

SHARE