கண்டி பள்ளிவாசல் மீது தாக்குதல்!- நாடு முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை

573

கண்டியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றின் மீது பொதுபல சேனா ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
கண்டி, குருந்துகொல்லை பிரதேசத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசலின் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் கற்கள் மற்றும் தடிகளை வீசி பள்ளிவாயிலின் கண்ணாடி ஜன்னல்களையும், மின் விளக்குகளையும் உடைத்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பான தகவல் அறிந்து பிரதேச வாசிகள் திரண்டு சென்ற நிலையில், பொதுபல சேனா ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பியோடியதாகவும், சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிசார் ஸ்தலத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
mahinda-visit-dargatown

pothupalasena-7

P1100867

 

death

hakeem_16-6-2014_1

 

 

SHARE