கனடாவின் ரொறன்ரோவின் பியர்சன் விமானம் மோசமான விமான நிலையமாக அடையாளப்படுத்தப்பட்டு;ள்ளது.
பியர்சன் சர்வதேச விமான நிலையம் மோசமான விமான நிலையங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.
வட அமெரிக்காவில் மிக மோசமான பெரிய விமான நிலையங்களில் பியர்சன் விமான நிலையம் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
ஜேடி பவரஸ் என்னும் ஆய்வு நிறுவனத்தினால் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் திருப்தியை மையமாகக் கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.கடந்த காலங்களிலும் ரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையத்தின் சேவை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வட அமெரிக்க நாடுகளின் பெரிய விமான நிலையங்கள் வரிசையில் 21 விமான நிலையங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதுடன் பியர்சன் விமான நிலையம் 20ம் இடத்தை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.