கனடாவில் ஆசிரியரின் மோசமான செயல்

20

 

கனடாவில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உயர்நிலை பாடசாலையில் கற்பித்த ரிக் வாட்கின்ஸ் என்ற ஆசிரியருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியர் பாடசாலையில் கற்ற மாணவர்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை மேற்கொண்டதாகவும் குற்றவியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் பாலியல் சீண்டல்களை மேற்கொண்டார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.ஒட்டாவாவின் ஒர்லான்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த சென் மெத்திவ் உயர்நிலைப் பாடசாலையில் ஆசிரியராகவும், கூடைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளருமாக கடமையாற்றிய வாட்கின்ஸ் என்ற ஆசிரியர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் நீதிமன்றில் ஆசிரியருக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்த ஆசிரியருக்கு எதிராக மொத்தமாக 54 குற்றச்சாட்டுகளை போலீச அரசு மத்திய உள்ளனர் இதில் 20 குற்றச்சாட்டு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

SHARE